கொழும்பு நகரில் முன்னெடுக்கவுள்ள ‘அதிசொகுசு இலகு ரயில் பாதைகள்” இவைதான்..

கொழும்பு நகரில் முன்னெடுக்கவுள்ள ‘அதிசொகுசு இலகு ரயில் பாதைகள்” இவைதான்..

கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் ஏற்படும் கடும் வாகன நெரிசலனை மட்டுப்படுத்த அதிசொகுசு இலகு ரயில் சேவைகளுக்கான பாதைகளை நிர்மாணிக்க முதல் கட்ட அறிக்கை மற்றும் ஆலோசனைகள் குறித்து சர்வதேச ஆலோசனைகளுக்காக கொரியாவின் சென் யங் நிறுவனத்திடம் நேற்று(22) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதற்காக 202 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 07 நாட்களுக்குள் சென் யங் நிறுவனம் குறித்த வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ், 07 இலகு ரயில் சேவைகளை உள்வாங்கும் வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயில் சேவை பாதைகள் கீழே;

01. கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரல்லை, யூனியன் பிளேஸ் இலிருந்து மருதானை வரை.. (14.8Km)

02. கோட்டை, மருதானை, மட்டக்குளிய இலிருந்து பேலியகொட வரை.. (11.5Km)

03. தெமட்டகொட, பொரல்லை, கிருலப்பன்ன, ஹெவலொக் டவுன் இலிருந்து பம்பலப்பிட்டி வரை…. (10Km)

04. மாலபே, பத்தரமுல்ல, பொரல்லை ஊடாக புறக்கோட்டை (15.3Km)

05. மாலபே, கொட்டாவ (9.6Km)

06. மாலபே, கடுவெல (06Km)

07. பேலியகொட, கடவத்த (13Km)

 

#reeshmaa