நாட்டில் நிலவும் அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் தரையிறங்கிய 16 கோடி ரூபா பென்ட்லி கார்… (Photos)

நாட்டில் நிலவும் அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் தரையிறங்கிய 16 கோடி ரூபா பென்ட்லி கார்… (Photos)

இலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா என்பவரினால் கொள்வனவு செய்யப்பட்ட அதிக விலையுடனான மோட்டார் வாகனம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அவரால் கொள்வனவு செய்யப்பட்ட Bentley Mulsanne Hallmark என்ற குறித்த மோட்டார் வாகனத்தின் பெறுமதி இலங்கை ரூபாயில் 160 மில்லியன் எனப்படும் 16 கோடி ரூபாயாகும்.

தம்மிக்க பெரேராவினால் கொள்வனவு செய்யப்பட்ட Blue மற்றும் Porcelain White நிறத்திலான Bentley Mulsanne Hallmark மோட்டார் வாகனம் விமானம் மூலம் நேற்று(15) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Bentley Mulsanne Hallmark என்ற வாகனம் உலகில் மொத்தமாக 50 மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறுதியாக நிர்மாணிக்கப்பட்ட மோட்டார் வாகனத்தை தம்மிக்க பெரேரா கொள்வனவு செய்துள்ளார்.

மேலும், இலங்கை சுங்க பிரிவு தகவல்களுக்கமைய இதற்காக 76 மில்லியன் தீர்வை வரி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.