எலுமிச்சை தோலை தூக்கி எறியாமல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க…

எலுமிச்சை தோலை தூக்கி எறியாமல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க…

எலுமிச்சை பயன்படுத்தி மாஸ்க் அல்லது பேக் செய்து முகத்தில் போடுவதால் உங்கள் முக அழகு அதிகரிக்கிறது.

எலுமிச்சை தோல்:
எலுமிச்சையில் சாறு பிழ்ந்ததும் தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அதுக்குள்ள இருக்கிற சத்துக்களோட அருமை நமக்குத் தெரியல எனறு தான் சொல்ல வேண்டும். உடலில் இருக்கும் அத்தனை கழிவுகளையும் வெளியேற்றுகிற டீ-டாக்சின் வாட்டரை தயாரிக்கலாம். தோலை ஈரமாக இருக்கும் போது அப்படியே தலைமுடி முதல் உடம்பு, கால் நகங்கள் வரை தேய்க்கலாம். உடம்பே பளபளக்க ஆரம்பித்துவிடும். அதேபோல, தோலை உலர வைத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, பொடுகுக்கும் முகத்தை அழகுக்கும் பயன்படுத்த முடியும்.

கரும்புள்ளிகளைப் போக்க:
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்துக் கொள்ளுங்கள். அந்த சாற்றில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். ஒரு பஞ்சை அந்த கலவையில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். சில நிமிடங்கள் கழித்து உங்கள் விரல் நுனியால் ஸ்க்ரப் செய்து பின்னர் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றி விரைந்து நல்ல மாற்றத்தை உணருங்கள்.

நகங்கள் வலிமையாக:
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாற்றைக் கலக்கவும். இந்த கலவையில் உங்கள் நகங்களை பத்து நிமிடங்கள் முக்கி எடுக்கவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பின்பற்றலாம்.

சரும பிரகாசத்திற்கு:
எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம், சருமத்திற்கு பிரகாசத்தைக் கொடுக்கின்றன. ஒரு எலுமிச்சையை பாதியாக நறுக்கிக் கொள்ளவும். அதனை அப்படியே உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வருவதால் உங்கள் சருமம் பொலிவடைந்து பளபளப்பாக மாறும்.

பற்கள் வெண்மைக்கு:
பேக்கிங் சோடா சிறிதளவு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்ட் கொண்டு உங்கள் பற்களைத் துலக்கவும். அடுத்த சில நிமிடங்கள் இந்த பேஸ்ட் உங்கள் பற்களில் இருக்கட்டும். இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கு மேல் இந்த பேஸ்டை வாயில் வைத்திருக்க வேண்டாம். உடனடியாக வாயைக் கழுவுங்கள். நீண்ட நேரம் இந்த பேஸ்ட் உங்கள் பற்களில் இருப்பதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படக் கூடும்.

பிங்க் நிற உதடுகளைப் பெற:
தேவையான பொருட்கள், தேன் சில துளிகள் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மட்டுமே. இந்த இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலந்து உதடுகளில் தடவவும். ஒரு மணி நேரம் அப்படியே ஊற விட்டு பின் ஈரத் துணியால் உதடுகளைத் துடைக்கவும்.

வறண்ட சருமத்திற்கு:
2-3 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 1 ஸ்பூன் புளிப்பு க்ரீம் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை உங்கள் முகம் கழுத்து ஆகிய இடத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இந்த மாஸ்க் பயன்படுத்துவதால், உங்கள் சருமம் ஈரப்பதத்தைப் பெறுகிறது , இதனால் உங்கள் வறண்ட சருமம் பொலிவைப் பெரும்.