தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராவது தொடர்பில் இன்று மாலை தீர்மானம்..

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராவது தொடர்பில் இன்று மாலை தீர்மானம்..

சம்பள பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமானது நேற்று(14) ஒத்திவைக்கப்பட்டதனை தொடர்ந்து மீளவும் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை எட்ட இன்று(15) மாலை ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒன்று கூடவுள்ளதாக ரயில்வே செயல்பாடுகளை மேற்பார்வை செய்யும் அலுவலர்களது தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ரயில்வே மேலாளர்களது இணை ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி அண்மையில் ரயில்வே தொழிற்சங்கங்களான ரயில்வே இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் ரயில்வே கண்காணிப்பு முகாமைத்துவத்திற்கு உட்பட்ட 5 தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் உறுதி மொழியின் பிற்பாடு பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பள பிரச்சினை குறித்து கடந்த 13ம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துரையாடிய போதிலும், ஜனாதிபதி உறுதியளித்திருந்தாலும் அதனை செய்ய முடியாதுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.