மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆய்வு செய்ய விசேட குழு…

மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆய்வு செய்ய விசேட குழு…

எரிபொருள் விலை அதிகரிப்புடன், மின்சக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு, அடுத்த வாரத்திற்குள் விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருளின் விலை அதிகரிப்புக்கு அமைய, மின் கட்டணத்தையும் அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், மின் உற்பத்திக்கான 95 ரூபாவிற்கு டீசல் பெற்றுக்கொண்டபோதிலும், தற்போது 123 ரூபாவிற்கு டீசலை கொள்வனவு செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நியமிக்கப்படவுள்ள குழுவின் ஆலோசனைக்கு அமைய, எதிர்கால நடடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.