ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும் அனுமதிப் பத்திரம்…

ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும் அனுமதிப் பத்திரம்…

(Fastnews | Colombo) – எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும் அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி சபாரி வண்டி சாரதிகளை தௌிவூட்டும் 08 வேலைத்திட்டங்கள் ஒன்றிணைந்த சுற்றுச்சூழல் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு ஆணைக்குழு இணைந்து சபாரி வண்டி சாரதிகளை தௌிவூட்டும் 08 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு நாட்டுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளின்படி சுற்றுலாத்துறையில் வெவ்வேறு மாற்றங்களை செய்ய வேண்டி ஏற்படுவதுதாக ஒன்றிணைந்த சுற்றுச்சூழல் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.