குண்டுத் தாக்குதல்களில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு…

குண்டுத் தாக்குதல்களில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை நேற்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள், குடும்பங்கள் மீது இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை மிகவும் மோசமான செயல் எனவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரினதும் குடும்ப உறவுகளுக்கு தமது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் யுனிசெப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சில வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கான மருந்துப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவற்றை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது.