ஹாங்காங் போராட்டதாரிகளுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் பேரணி

ஹாங்காங் போராட்டதாரிகளுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் பேரணி

(FASTNEWS | COLOMBO) – ஹாங்காங்கில் கைதிகள் ஒப்படைப்பு மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் நேற்று(16) பேரணி நடை பெற்றது.

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி நடத்திய போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது.

இதனால், கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்தார். ஆனாலும் போராட்டக்காரர்கள் சமரசம் ஆகவில்லை. மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் 1000-க்கும் மேற்பட்ட ஹாங்காங் மக்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.