ஆரம்ப பாடசாலை கல்வியினை செயல்திறன் மிக்கதாக உயர்த்த கல்வியமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஆகியவை ஒன்று சேர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கால குழந்தை பருவ அபிவிருத்தி திட்டத்திற்கு கீழ் குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆரம்ப பாடசாலை கல்வியானது பிள்ளைகளின் வாழ்வின் அடிப்படையான அத்திவாரம் எனவும் ஆதலால், அதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
சர்வதேச ஒத்துழைப்புடன் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும், ஆரம்ப பாடசாலைக்கு தேவையான வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
#reeshma