அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைமையில் இன்று தாதியர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது கொழும்பு-7 இல் அமைந்துள்ள சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமது கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்த சுகாதார அமைச்சு இதுவரை தமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கமைவாக ஆர்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
தாதியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை அதிகரித்தல், தாதியர்களுக்கான பட்டப்படிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே அகில இலங்கை தாதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.