அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் எம்.எச்.எம் நவவி தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அந்ந பதவிக்காக சீனி எம் மொஹமட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கான நடவடிக்கைகள் நேற்று(06) மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.