இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் அகில தஞ்சய, எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ண தொடரின் முதல் சுற்றுக்களில் அனேகமாக விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகில தனஞ்சயவின் முதல் குழந்தை பிறக்கும் தினத்தினை அண்டிய நிலையிலேயே ஆசியக் கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளதாலேயே அவர் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.