(FASTGOSSIP|COLOMBO) – நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசி விதிமுறையை மீறி பந்துவீசிய குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ள அகில தனன்ஜய எதிர்வரும் 28ம் திகதி இந்தியாவின் சென்னைக்கு பயணிக்கவுள்ளதுடன், அங்கு பந்துவீச்சு பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில தனன்ஜய நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதேவேளை, அகில தனன்ஜய இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்கு ஐ.சி.சி அனுமதி வழங்கியிருக்கும் போதும், அவர் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அகில தனன்ஜயவின் இடத்துக்கு டில்ருவான் பெரேரா இணைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.