அக்மீமன பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் தவறு செய்யவில்லை

(FASTNEWS|COLOMBO) – காலி – அக்மீமன – மணவில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய், தவறு செய்யவில்லை என்று ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிசாரும் இராணுவமும் தனித்தனியாக இது தொடர்பாக விசாரணை நடத்தி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்ட சிப்பாய் தற்போது பூசா இராணுவ முகாமில் காவலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.