நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அண்டிய பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்னும், புத்தளம் – மன்னார் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையால் நேற்று(18) புத்தளம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புத்தளம் மாவட்டத்தின் சில கிராமங்களில் உள்ள சுமார் 250 வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டிருப்பதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
நேற்று(18) மாலை வீசிய கடும் காற்று காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மெல்லன்குளம், போகஹாயாய, கிவுல கட்டுவ மற்றும் ஹல்மில்லாவா போன்ற கிராமங்களுக்கு இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
$