பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று(21) காலை 7 மணி முதல் சி.சி.டி.வி. கெமரா பொருத்தப்பட்ட தூணில் ஏறி சுமார் 50 கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த வாரம் முதல் குறித்த சிறைச்சாலையில் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.