அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா கைது…

பிரபல பாதாள உலக குழுத்தலைவரான அங்கொட லொக்காவிற்கு மிகவும் நெருக்கமான சந்தேகநபரான எலவலகே சரத்குமார எனப்படும் சீட்டி ‘Cheeti’ என்பவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்த கைக்குண்டு ஒன்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் தற்போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதுடன், அதன் பின்னர் அவர் திட்டமிட்ட குற்றச் செயல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் கூறியுள்ளார்.