‘அங்கொட லொக்கா’ சரணாகிறார்… பலத்த பாதுகாப்பில் காவற்துறை…

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் ‘அங்கொட லொக்கா’ எனும் பெயருடைய பாதாள உலகக் குழுவின் தலைவன் நேற்று(13) களுத்துறை நீதிமன்றில் ஆஜராகப்போவதாக அறிவித்ததினை அடுத்து களுத்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்திருந்தன.

மேலும், களுத்துறை நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளதோடு, வெளியிடங்களிலிருந்து களுத்துறைக்கு உட்செலுத்தப்படும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அங்கொட லொக்கா நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்றும் இன்று முன்னிலையாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(rizmira)