அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா மற்றும் பாகிஸ்தான் உதவி..

அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளது.

வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என இலங்கைக்கான பாகிஸ்தானிய பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சப்ராஸ் அகமட் கான் ஷிப்ரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அழிவுகள் பெரும் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் குறித்த இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கை மக்களுக்கு பாகிஸ்தான் தோள் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீனாவும் சுமார் 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்களை நன்கொடையாக இலங்கைக்கு வழங்க உள்ளது. மழை மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த இந்த உதவி வழங்கப்பட உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு சீன ஜனாதிபதி இரங்கல் செய்திகளையும் அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

(rizmira)