அசாதாரண காலநிலை காரணமாக நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை இரத்து..

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக நாளை(27) நடைபெற இருந்த நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவிக்கையில்; குறித்த பரீட்சை நடைபெறும் தினம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவசர நிலைமைகளுக்காக வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்களை மீட்க தேவையான படகு வசதிகளையும் வழங்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, குறித்த படகு சேவைகள் தேவைப்படின் 071 645 34 02 அல்லது 077 465 22 78 எனும் இலக்கங்களூடாக தொடர்பு கொள்ளுமாறும் மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.

 

(rizmira)