மேல் மாகாண புதிய ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று(22) சபை அமர்வின் போது முன்வைக்கவுள்ளதாக குறித்த மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல தெரிவித்திருந்தார்.
குறித்த பிரேரணைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுடைய ஒருவர், ஆளுநர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளமை குறித்து தமக்கு நம்பிக்கையில்லையென தெரிவித்தே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.