(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிபிசி சிங்கள சேவையின் கொழும்பு செய்தியாளர் அசாம் அமீன் குறித்த நிறுவனத்தில் இருந்து தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 01ம் திகதி அவர் பிபிசி சேவையில் இருந்து விலகுவதாக உத்தியோகபூர்வாக எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்.
எனினும், பிபிசி நிறுவனம் அதனை நிராகரித்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்க மற்றும் அசாம் அமீன் இடையே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் ஒன்றின் குரல் பதிவு தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி சிங்ஹலே அமைப்பு ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தி வெளிப்படுத்தி இருந்தார்.
அதன்பின்னர் குறித்த குற்றச்சாட்டுடன் பிபிசி நிறுவனம் அசாம் அமீனின் இராஜினாமா கடிதத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது.