அஜித்தா இப்படி செய்தார்

அதிகமான ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இரண்டு தமிழ் நடிகர்கள் என்றால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இரண்டு வார்த்தைகள்தான் வரும். ஒன்று விஜய், மற்றையது அஜித்.

எத்தனை லட்சம் ரசிகர்கள் தனக்கென இருந்தாலும் அஜித் எப்போதும் தனக்கு எது சரி என்று படுகின்றதோ அதை தான் செய்வார். யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டார். அதில் ஒரு முக்கிய செயற்பாடாக, எப்போதும் அஜித் தனது ரசிகர்களிடம் விலகியே இருப்பார்.

எனினும் அஜித், நேற்று மிகவும் வித்தியாசமான முறையில் நடந்துகொண்டு ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளார். இவர் நேற்று ரசிகர்களுடம் கூடி நின்றதுடன், சில நேரம் கலந்துரையாடியுமுள்ளாராம். இதனை உறுதிப்படுத்தும் முகமாக அஜித், ரசிகர்களுடன் நிற்பது போல் பல புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்துள்ளன.

இனி இவர் தொடர்ந்து இவ்வாறு ரசிகர்களுடன் சாதாரனமாக இருப்பாரோ என்ற மிகப்பெரிய ஆசையும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது