(FASTNEWS|COLOMBO) – சென்னையில் தனியார் நிறுவனத்தின் கிளையை தொடங்கி வைக்க வந்த ஐஸ்வர்யா ராய், ரசிகர்களின் அன்புக்கு அஜித் தகுதியானவர்தான் என்று கூறியிருக்கிறார்.
விழாவுக்கு பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நானும் நடிக்க இருக்கிறேன் என்பதை உறுதி செய்துகொள்கிறேன். அவருடைய புதிய பயணத்தில் நானும் இருக்கிறேன். மணி ரத்னம் உருவாக்கும் எந்த ஒரு படைப்பிலும் அங்கமாக இருப்பது எனக்கு பெருமையாகும்.
அஜித் ஒரு அற்புதமான நடிகர். அவரது வெற்றியும், ரசிகர்களிடமிருந்து அவருக்கு கிடைக்கும் அன்பும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இதற்கெல்லாம் தகுதியானவர்தான்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இல்லாவிட்டாலும் படப்பிடிப்பின்போது அவரை சந்தித்திருக்கிறேன். அவரது குடும்பத்தினரையும் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அவரது வெற்றிக்காக பாராட்டுகளை தெரிவிக்க விரும்புகிறேன்’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.