அஜித் vs விஜயதாச.. – நாடகம் ஆடி தேசப்பற்றாளன் ஆக சித்தரிக்க வேண்டாம்..

தேசப்பற்றுள்ளவர் போன்று பொய்யாக நாடகம் நடித்து உண்மையை மறைக்க முற்பட வேண்டாம் என பதவி விலகிய அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சரவையில் இருப்பதற்கு தான் வெட்கப்படுகின்றேன் என அமைச்சர் விஜேதாச கூறியுள்ளார். அப்படியானால், தன்னுடைய பதவி நீக்குவதற்கான கடிதம் கிடைக்காதிருந்தால், இருப்பதற்கு வெட்கப்படும் அமைச்சரவையில் தொடர்ந்தும் இருப்பீர்களா எனவும் அவரிடம் பிரதி அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு விஜயதாச. “..உண்மையான பிரச்சினையை மறைத்து பொய்யாக நாட்டுப் பற்றாளர் போன்று நடிக்க வேண்டாம். அலரி மாளிகைக்கு சட்ட மா அதிபரை அழைத்து வந்து அவரை அச்சுறுத்தியது யார்..” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

அதற்கு பதிலளித்த அஜித் பீ.பெரேரா, “.. இது மிகவும் பொய்யான ஒரு குற்றச்சாட்டு. இதனை முற்றாக மறுக்கின்றோம்..” எனவும் கூறியுள்ளார்.

 

(rizmira)