அஜ்மலின் ஒப்பந்தத்தை ஸஸ்பண்ட் செய்தது பாகிஸ்தான் கிரிகெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் சயீத் அஜ்மல். சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும்போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அஜ்மல் பாகிஸ்தான் அணியில் சேர்க்கபடாமல் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘‘ஐ.சி.சி. இரட்டை வேடம் போடுகிறது. வலது கை ஆப் ஸ்பின்னரை மட்டுமே குறி வைக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் வீரர்கள் மீதுதான் ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்கிறது’’ என்று நேரடியாக குற்றம் சுமத்தினார்.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சம்பள ஒப்பந்தத்தில் ‘பி’ கிரேடில் இடம்பெற்றிருந்த அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்டு செய்துள்ளது.