அடங்க மறுக்கும் மீரா மிதுன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில், பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை மீரா மிதுன். 

அவர் தென்னிந்திய அழகிப் போட்டியில் வென்றவர். பின் அதில் தவறு நடத்தப்பட்டதாகக் கூறி, அழகிப் பட்டத்தை திரும்பப் பெற்றனர்.

இந்நிலையில், அவர் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி, பலரிடம் இருந்து பணம் பெற்றார். அழகிப் போட்டி எதையும் நடத்தாததால், பணம் கொடுத்தவர்கள் பலரும் பொலிசில் புகார் கொடுத்தனர். அது தொடர்பான விசாரணையும்; வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மீரா மிதுனுக்கு சினிமாவில் இருந்து பெரிய வாய்ப்புகள் வரும் என அவர் காத்திருக்கிறார். இதற்காக, அவர் தன்னை படு கவர்ச்சியாக படம் எடுத்து அதை, சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.

லோ நெக்கில் தயார் செய்யப்பட்ட உடை அணிந்து படு கவர்ச்சியாக சமீபத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட, அதைப் பார்த்த பார்வையாளர்கள், முகம் சுழித்து, மீரா மிதுனை வசைபாடி வருகின்றனர்.