வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அடிக்கடி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய சிறைக் கைதிகளை தடுத்து வைப்பதற்கான ரிமான்ட் சிறைச்சாலையை பிறிதொரு இடத்தில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு அண்மையில் காணப்படுகின்ற வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ லங்கா நிறுவனத்துக்கு உரித்தான காணியினை இதற்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் பாரிய நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.