நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அடுத்த சில நாட்களுக்கு குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைப் பிரதேசங்களிலும் மற்றும் ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடியதான சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை, ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடியதான சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.