அடுத்து வரும் மூன்று மாத காலத்திற்குள் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மையில் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், தமது இரண்டு சகோதரிகளின் ஆலோசனையின் பேரிலேயே தாம் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜனாதிபதி மைத்திரியிடம் இருந்து தன்னை பாதுகாக்கும் பொருட்டே அவர் இரண்டு சகோதரிகளான பிரீதி மற்றும் காந்தி ஆகியோரின் பெயர்களை போலியாக மஹிந்த கூறியிருக்கலாம் என்று இணையத்தளம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது.
(riz)