2018 முதல் நாடு தழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ் சேவை…

இந்திய அம்பியுலன்ஸ் சேவை அடுத்த வருடம் முதல் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளுக்கு உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போது அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் 88 அம்பியுலன்ஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. மேலும் 250 அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட இருப்பதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேலதிகமாக 24 ஹெலிக்கொப்டர்களும் 1025 அம்பியுலன்ஸ் வண்டிகளும், அனர்த்தங்களின் போது செயற்படக்கூடிய 24 வாகனங்களையும் ஜேர்மனியின் ஸ்ரெய்கர் அமைப்பின் அவசர விபத்துச் சேவை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.