அடுத்த வருடம் வற் வரியினை குறைக்க நடவடிக்கை – நிதியமைச்சர்

அடுத்த வருடம் வற் வரியினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வற் வரி அல்லது நாட்டை கட்டியெழுப்பும் வரி என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், அது இரண்டிலும் மக்களுக்கு குறைந்த சுமையாக காணப்படுவது வற் வரி என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புளுமென்டல் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வருமானம் குறைந்தோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

கடந்த கால ராஜபக்ஸக்களால் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டமையினாலே இன்று இவ்வாறான வரி அதிகரிப்புக்கு காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சாலாவ வெடிப்பினால் சேதங்களை எதிர்கொண்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அரச அதிகாரிகள், நிர்வாகிகள் ஆகியோரின் பலவீனங்களாலே குறித்த பணிகளில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.