(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
பெட்ரோலுக்காக வரிசையில் நிற்கும் வாகன உரிமையாளர்கள் அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் இருப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு லங்கா ஐ.ஓ.சி சில பெட்ரோல் பங்குகளை வைத்திருப்பதாகவும், மேலும் பெட்ரோலை சந்தைக்கு வெளியிடுமாறு லங்கா ஐ.ஓ.சியிடம் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், 23ஆம் திகதிக்கு பின்னர் பெட்ரோல் விநியோகம் வழமைக்கு வரக்கூடும் எனவும் அதற்குள் ஏற்றுமதி செய்யப்பட்ட பெட்ரோல் நாட்டை வந்தடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு சி.பி.சியிடம் போதுமான அளவு டீசல் கையிருப்பு இருப்பதாகவும், தற்போது விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.