எதிர்வரும் திங்கட்கிழமை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர்.
எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படல் மற்றும் மாலபே தனியார் வைத்திய கல்லூரியின் மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதி வழங்குவதற்கு முயற்சித்தல் உள்ளிட்ட ஆறு காரணிகளை எதிர்த்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
முதல் கட்ட எச்சரிக்கையாக வைத்தியர்கள் காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையில் போராட்டம் நடத்தவுள்ளனர்.
மகப்பேற்று மருத்துவமனைகள், புற்று நோய் வைத்தியசாலைகள் மற்றும் சிறுவர் வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இந்த போராட்டத்தில் இணைத்து கொள்ள மாட்டார்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் தொடர் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என அவர் ஊடகங்களுக்கு நேற்று குறிப்பிட்டுள்ளார்.
தரம் குறைந்த சயிட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடல், வெளிநாட்டு பயிற்சிகளை முடித்து வரும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.