(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
அட்டுலுகம கொலை செய்யப்பட்ட 9 வயதான அயிஷா என்ற சிறுமியின் இறுதிகிரிகைகள் இன்று இரவு (30-05-2022) இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் திரளான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அட்டுலுகம சிறுமியை தாமே கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த 29 வயதுடைய நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.