அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை…

(FASTNEWS| COLOMBO) – பதினோரு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ஏனையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் ஒன்றை உயர் நீதிமன்றத்திற்கு முன் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலை, அதற்கு உதவி செய்தமை மற்றும் கொலை செய்வதற்காக திட்டமிட்டமை ஆகிய காரணங்களுக்காக குறித்த இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.