பாகிஸ்தான் இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சையிட் அப்ரிடி அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி டி 20 உலகக் கோப்பை கிரிக்கட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற்றிலேயே வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் டி 20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து அப்ரீடி விலகவேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலரும் கூறிவந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் டி 20 கிரிக்கட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அப்ரிடி நேற்றைய தினம் (03) அறிவித்தார்.
தனது ட்விட்டர் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் அவர் இதை அறிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கட் சபை தலைவர், கிரிக்கட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் டி 20 போட்டிகளில் தான் தொடர்ந்து விளையாடப் போவதாக கூறியுள்ளார்.