அணியின் தலைமை பயிற்றுநராக சுனில் குணவர்தனவை நியமிக்க தீர்மானம்

(FASTNEWS | COLOMBO) – தேசிய மெய்வல்லுநர் அணியின் தலைமை பயிற்றுநராக சுனில் குணவர்தனவை நியமிக்க இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

இவரை தலைமைக்கு நியமிப்பது தொடர்பான எழுத்து மூல பரிந்துரை கடிதத்தை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவுக்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் அனுப்பியுள்ளது.

தேசிய மெய்வல்லுநர் அணியின் தலைமை பயிற்றுநர் பதவி அண்மைக்காலமாக வெற்றிடமாக இருந்து வந்தது. இந்நிலையில், மெய்வல்லுநர் பயிற்றுநர்களில் ஒருவரான சுனில் குணவர்தனவை நியமிக்க இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைத்தவுடன் தேசிய மெய்வல்லுநர் குழுவை சுனில் குணவர்தனவிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.