அணியில் உள்வாங்கப்படாத மெத்தீவ்ஸ் எடுத்த அதிரடி தீர்மானம்

அடுத்த வருடம் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலக்கிண்ண போட்டி தொடரில் தாம் பந்து வீச தயாராக இருப்பதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு 20 போட்டியை பொறுத்த வரையில் ஒரு துறையில் மட்டும் திறமையை வெளிப்படுத்துவது போதாது என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூஸ்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டி தொடரில் அஞ்சலோ மெத்தீவ்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தான் அஞ்சலோ மெத்தீவ்ஸ் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இலங்கை அணியின் சகல துறை வீரராக அஞ்சலோ மெத்தீவ்ஸ் விளையாடிய போதும் அவருக்கு ஏற்பட்ட உபதையின் காரணமாக துடுப்பாட்ட வீரராக தனது திறமையை வெளிபடுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

எப்படி இருந்தாலும் குறித்த தீர்மானம் இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.