“அணியில் மாற்றங்கள் நிலவும்” – திமுத் கருணாரத்ன

(FASTGOSSIP | COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று(31) இத்மபெரவுள்ள மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரின் வெற்றியினை முழுமையாக பெறுவதே இலங்கை அணியின் நோக்கம் என அணியின் தலைவர் திமுத் கருணாரத்னா நேற்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இலங்கை அணியானது 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இது தொடர்பில் திமுத் கருணாரத்னா தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“இது எமது 44 மாதங்களுக்கு பின்னரான ஒருநாள் போட்டிகளின் வெற்றியாகும். இது தொடர்பில் தாம் பின்னர் தான் அறிந்தோம். நாம் கடந்த காலங்களில் போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. ஆதலால் இந்தத் தொடரில் முழுமையாக தொடரினைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கு எமக்குண்டு. இது மாபெரும் வெற்றியாகும். நுவன் அண்ணனுக்காக இந்தப் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும். கட்டாயம் அணியில் மாற்றம் ஏற்படும். இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என நான் கூறினேன். ”