முழுமையாக அணு ஆயுதங்களை கைவிடாமல், வட கொரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படமாட்டாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
அணு திட்டங்களை கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளதையும் மைக் குறிப்பிட்டார்.
கிம் ஜாங்-உன் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அவசரத்தை புரிந்து கொள்வார் என்று நம்புவதாக தெரிவித்த அவர், 2020ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளையும், ஆயுதங்களையும் குறைத்துக் கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இனி வட கொரியா அணுசக்தி அச்சுறுத்தல் தரும் நாடாக இருக்காது என்று அறிவித்த டிரம்ப், “அனைவரும் இனி பாதுகாப்பாக உணரலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.