கேகாலை, ரங்வல மஹாநாக மஹா வித்தியாலயத்தின் அதிபரும் பாடசாலையில் எழுதுவிளைஞர் பதவியில் இருக்கும் பௌத்த தேரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தரம்–6 இற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக 60,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவலின் படி இவர்கள் பாடசாலை வளாகத்தில் வைத்து நேற்றுக் காலை கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் கேகாலை நீதி வான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர் பான மேலதிக விசாரணைகள் முன் னெடுக்கப்படுவதாக அவர் கூறி னார்
அதிபரும் பௌத்த தேரர் ஒருவரும் கைது