அதிகாரம் வழங்கினால் ஒரு வாரத்திற்குள் வன்முறை சம்பவங்களை முற்றாக ஒழிப்பேன்.. – விக்கி சவால்…

தனக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டால் சுமார் ஒரு வாரத்திற்குள் வடக்கில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை முற்றாக இல்லாதொழித்து காண்பிப்பேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.

அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.