அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க ஆதரவு வழங்க மாட்டோம் – மனோ..

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரவுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான 20வது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் அது முழுமையாக நீக்கப்படக் கூடாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.