அதிகார பேராசையில் பெண்ணொருவருக்கு மஹிந்த என்ன செய்தார் தெரியுமா?

மதுவுக்கு முற்றுப்புள்ளி என கூறி மக்களை ஏமாற்றி அரசியல் நடிப்பில் ஈடுபட்டிருந்த மஹிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கியுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இரத்தினபுரியில் பெண் ஒருவருக்கும் அவரது கணவருக்கும் இரண்டு அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளார் மகிந்த.

நாமலுக்கு நெருக்கமான பெண் ஒருவரின் கணவருக்கு அனுமதிபத்திரம் வழங்குவதற்கு மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், நாமலின் கோரிக்கைக்கமையவே அந்த அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஒரு இரகசியமாகும்.

நீலப்படை அணியின் கண்டியை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரம் தற்போது வரையில் அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி போலி மதுபானம் விற்பனை செய்து பொலிஸாரிடம் சிக்கியமையின் காரணமாகவே இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அன்று தனக்கு நெருக்கமான பலருக்கு மதுபான அனுமதி பத்திரம் வழங்கியதோடு, மதுபானத்திற்கு அரச அனுசரணை வழங்கிய மஹிந்த ராஜபக்ச, இன்று வெள்ளை துணியை போர்த்திக் கொண்டு பௌத்தனாக முன் நிற்பதற்கு காரணம் அதிகாரத்தின் மீது கொண்ட பேராசையே என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.