அதிக கடன் சுமையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் – தயாசிறி

இரண்டு பில்லியனுக்கு அதிகமான கடன் சுமையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் KPMG எனப்படும் சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை இதனை சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்பட்ட போது, கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனத்துடன் துறைமுக அதிகாரிகள் எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாமல் அப்போதைய அமைச்சரவையின் விருப்பின் பேரில் இதை அமைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி நிலைமை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கிரிக்கெட் நிறுவனத்தினரால் செலுத்தப்பட வேண்டிய கடனை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுப்போமானால் வீரர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் இல்லாமல் போய்விடும் என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.