அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றி வளைக்க நடவடிக்கை…

அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில வர்த்தகர்கள் உரத்தை கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலான விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக தொலைபேசியின் ஊடாக அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு செயலகம் பொதுமக்களை கேட்டுள்ளது.

இதற்கான தொலைபேசி இலக்கம் 0112 88 47 77 ஆகும் என்று உர செயலகம் தெரிவித்துள்ளது.