நீண்ட விடுமுறை காரணமாக கதிர்காமத்திற்கு சென்ற பொதுமக்களிடம் அப்பம் போன்ற உணவு வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அவ்வாறான வர்த்தகர்களை இனங்காணுவதற்கான நடவடிக்கைகளை கதிர்காமம் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், குறித்த வர்த்தகர்கள் தொடர்பில் தகவல்கள் அறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.