அதிக விலையுடைய மருந்து வகைகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை…

புற்று நோயாளர்களுக்கு கொடுக்கப்படும் அதிக விலையுடைய மருந்து வகைகள் பலவற்றின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

முதல் கட்டமாக அத்தியவசியமான 48 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட நடவடிக்கையாக அதிக விலையுடைய மருந்து வகைகளின் விலைகளை குறைக்க சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளது.

மேலும், மருந்து விலைகள் குறைக்கப்பட்ட பின்னர் தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களில் திருத்தங்களை செய்வதற்கு சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

சுகாதார சேவையில் இருந்து வெட் வரி நீக்கப்பட்டதன் பின்னர் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் வைத்தியசாலைகளின் கட்டணங்களையும் ஒழுங்கமைக்க தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.