அதிபர் பதவிக்கான வெற்றிடங்களுக்கான நேர்முகப் பரீட்சையானது ஒத்திவைப்பு..

2018 ஒக்டோபர் மாதம் 29,30 மற்றும் நவம்பர் மாதம் 01,02,03,05,08,09,10 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த நேர்முகப் பரீட்சைகள் மீண்டும் பிறிதொரு நாளில் நடைபெறும் என்றும் அது குறித்து அறியத் தருவதாகவும் தயவாய் வேண்டிக் கொள்வதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.